தேவகோட்டை, சிங்கம்புணரியில் சாலை பாதுகாப்பு வார விழா

தேவகோட்டை, சிங்கம்புணரியில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.

Update: 2019-02-07 22:15 GMT
தேவகோட்டை, 

பொது மக்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த வருடம் 30-வது சாலை பாதுகாப்பு வார விழா கடந்த 4-ந்தேதி தொடங்கி வருகிற 10-ந்தேதி வரை நடக்கிறது. தேவகோட்டை ராம்நகர் பார்க்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி புளியாலில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம், ரோட்டரி சங்க தலைவர் நாகூர் மீரா, செயலர் காளிதாஸ், உறுப்பினர் திருச்செல்வம், வக்கீல் சேந்தனி கண்ணதாசன், பாண்டி செல்வம், போலீசார் செல்லமுத்து, கண்ணன் உள்பட பொதுமக்கள் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் இருசக்கர வாகனங்களுக்கு கருப்பு வில்லை ஒட்டுதல் மற்றும் ஹெல்மெட், சீட்பெல்ட், காக்கி சீருடை போட்டு வரும் ஓட்டுனர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. ஆட்டோ ஓட்டுனர்களுக்கு முதலுதவி பெட்டி வழங்கப்பட்டது.

சிங்கம்புணரியில் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார், பொதுமக்கள் இணைந்து ஹெல்மெட், குடிபோதையில் வாகனம் ஓட்டும் போது ஏற்படும் அபாயம், சீட்பெல்ட் அணிந்து கொள்வது உள்பட பல்வேறு விசயங்கள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளுடன் ஊர்வலம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாத்துரை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

இதில் சிங்கம்புணரி இன்ஸ்பெக்டர் பொன்ரகு, சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் முன்னிலையில் சிங்கம்புணரி சேவுகமூர்த்தி மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவிகள், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இதில் சேவுகமூர்த்தி பள்ளி தாளாளர் செந்தில், செயலாளர் சந்திரசேகர், பள்ளி தலைமையாசிரியை ஹேமாமாலினி உள்பட அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்