புளியந்தோப்பில் குடிசைகளை அகற்ற எதிர்ப்பு; அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
புளியந்தோப்பில், குடிசைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருமாவளவன், செ.கு.தமிழரசன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு குடிசைகளை காலி செய்தனர்.
திரு.வி.க.நகர்,
சென்னை புளியந்தோப்பு பேசின்பிரிட்ஜ் சாலையில் 864 குடிசை வீடுகள் இருந்தன. இவற்றை இடித்துவிட்டு, குடிசைமாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி, அவர்களுக்கே வீடுகளை ஒதுக்க தமிழக அரசு முடிவு செய்தது.
அதை ஏற்று 672 குடும்பத்தினர் குடிசையை காலி செய்துவிட்டு சென்று விட்டனர். ஆனால் மீதம் உள்ள 192 வீட்டின் உரிமையாளர்கள், குடிசைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, காலி செய்ய மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பு கட்டும்வரை அனைவரும் வீடுகளை காலி செய்து விட்டு, அதன் அருகிலேயே குடிசை மாற்று வாரியம் மூலம் இரும்பு தகரத்தால் அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக குடியிருப்புகளில் தங்கும்படி அறிவுறுத்தி பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் மறுத்துவிட்டனர்.
இதையடுத்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கு சென்று, குடிசைகளை அகற்றும் பணியில் ஈடுபட முயன்றனர். இதற்காக குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜ் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், 8 லாரிகள் மற்றும் 4 பொக்லைன் எந்திரங்களுடன் அங்கு சென்றனர்.
அசம்பாவிதங்களை தவிர்க்க புளியந்தோப்பு துணை கமிஷனர் சாய்சரண் தேஜஸ்வி, உதவி கமிஷனர் விஜய்ஆனந்த் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த 192 குடிசைகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் குடிசைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் ஆகியோர் அங்கு வந்தனர். குடிசைகள் அகற்றுவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டனர்.
அதை ஏற்றுக்கொண்ட அவர்கள், அடுக்குமாடி குடியிருப்பு கட்ட நீங்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கூறி குடியிருப்புவாசிகளை சமரசம் செய்து, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
அதை ஏற்று, எதிர்ப்பு தெரிவித்த 192 குடும்பத்தினரும் தங்கள் குடிசையை காலி செய்துவிட்டு தற்காலிக குடியிருப்புக்கு சென்றனர். இதையடுத்து அந்த குடிசைகளை அகற்றும் பணியில் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.