விஷம் குடித்து சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை
மணவாளக்குறிச்சி அருகே விஷம் குடித்து சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்டார்.
மணவாளக்குறிச்சி,
குமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே செவிடன்விளை பகுதியை சேர்ந்தவர் ஜானகிநாதன் (வயது 46). இவர் விருதுநகர் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இதற்காக அவர் சாத்தூரில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். ஜானகிநாதன் அடிக்கடி சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன் அவர் சொந்த ஊருக்கு வந்தார்.
இந்தநிலையில் அவர் விஷம் குடித்து வீட்டில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த மணவாளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஜானகிநாதன் குடும்ப பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்டாரா? அதிகாரிகளின் பணி நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டாரா? என்று தெரியவில்லை. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.