செஞ்சியில் தொழிலாளி, தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

செஞ்சியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-02-06 22:30 GMT
செஞ்சி,

செஞ்சி சங்கராபரணி ஆற்றுப்பாலத்தின் கீழ் நேற்று காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைபார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி செஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் அனந்தபுரம் அருகே உள்ள கீழ்மலை கிராமத்தை சேர்ந்த மன்னார் மகன் சேகர்(வயது 38), கூலிதொழிலாளி என்பதும், கடந்த 30-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் சங்கராபரணி ஆற்றுப்பாலத்தின் கீழ்பகுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட சேகருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்