பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் திருத்துறைப்பூண்டியில் நடந்தது
திருத்துறைப்பூண்டியில் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி,
2017-2018-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். கஜா புயலால் மகசூலை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். புயல் சேத கணக்கெடுப்பில் விடுபட்ட தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். புயலில் சேதம் அடைந்த தோட்டக்கலை பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருத்துறைப்பூண்டியில் உள்ள கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சாமிநாதன் தலைமை தாங்கினார். நகர தலைவர் பன்னீர்செல்வம், நகர செயலாளர் ஜெயபிரகாஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் ரகுராமன், மாவட்டக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் நகர குழு உறுப்பினர்கள் பாஸ்கர், வக்கீல் செந்தில்குமார், தமிழ்மணி, பசுபதி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.