வேப்பனப்பள்ளி அருகே அரசு பஸ் டிரைவர்-கண்டக்டர் மீது தாக்குதல் மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

வேப்பனப்பள்ளி அருகே அரசு பஸ் டிரைவர் - கண்டக்டர் மீது தாக்கிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2019-02-06 22:00 GMT
வேப்பனப்பள்ளி,

கிருஷ்ணகிரியில் இருந்து வேப்பனப்பள்ளி அருகே உள்ள அலேகுந்தாணிக்கு தினமும் அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரியில் நேற்று முன்தினம் இரவு அந்த பஸ் சென்றது. அந்த நேரம் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் சிலருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதை பார்த்த பஸ் டிரைவர் மாரிமுத்து (வயது 50), கண்டக்டர் வரதராஜ் (40) ஆகிய 2 பேரும் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினார்கள். இதைத் தொடர்ந்து அலேகுந்தாணி கிராமத்தில் பஸ்சை நிறுத்திய அவர்கள் அங்கு தூங்கி கொண்டிருந்தனர்.

அந்த நேரம் டிரைவர் மாரிமுத்து மற்றும் கண்டக்டர் வரதராஜ் ஆகியோரை பஸ்சில் தகராறு செய்த நபர் மற்றும் சிலர் சேர்ந்து சரமாரியாக தாக்கினார்கள். இதில் அவர்கள் காயம் அடைந்தனர். அவர்களின் அலறல் சத்ம் கேட்டு கிராம மக்கள் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.

இதையடுத்து நேற்று அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாரிமுத்து, வரதராஜ் ஆகியோர் இது குறித்து வேப்பனப்பள்ளி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்