கொழுப்பின் அளவை சோதிக்கும் எல்.சி.

உடற்பயிற்சி சாதனங்கள் மற்றும் எடையை ட்ராக் செய்யக்கூடிய செயலிகள் மற்றும் கருவிகள் நாள்தோறும் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்த வரிசையில் பிரான்ஸ் நாட்டு ஆய்வாளர்கள் எல்.சி. ( LSEE ) என்றழைக்கப்படும் புதிய செயலியை கண்டுபிடித்துள்ளனர்.;

Update: 2019-02-06 09:24 GMT
எல்லாருடைய உடல்நிலைக்கும் ஒரே மாதிரி பயிற்சிகள் ஒத்து வராது. நீண்ட நாள் உடற்பயிற்சிக்கு பின்னரும் எந்தவித மாற்றமும் இல்லை என்று புலம்புவோரும் உண்டு.

இந்த செயலி அவர்களுக்கானது தான். ஒரு துளி ரத்தத்தைக் இத்துடன் இணைப்பாக வரும் ஒரு சிறிய கருவியில் வைத்தால் நமது உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பின் அளவு எவ்வளவு என்பதையும், எந்தவிதமான பயிற்சிகள் செய்தால் எடை குறையும் மற்றும் எந்த விதமான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும் போன்ற தகவல்களை நமது செல்போனுக்கு அனுப்பிவிடும் இந்த எல்.சி. செயலி. நாம் உடற்பயிற்சி முடித்த பின் எவ்வளவு கொழுப்பு எரிக்கப்பட்டிருக்கிறது என்று திரையில் காட்டும். இதனால் நாம் செய்யும் பயிற்சிகள் பயன்தருகின்றனவா என்று இதனைக்கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

மேலும் செய்திகள்