21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதாரத்துறை ஊழியர்கள் தர்ணா போராட்டம்

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதாரத்துறை ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-02-05 23:25 GMT

புதுச்சேரி,

7–வது ஊதியக்குழு பரிந்துரைத்த ஊதியம், வீட்டு வாடகைப்படியை வழங்கவேண்டும், திருத்தப்பட்ட சீனியாரிட்டி பட்டியலை வெளியிடவேண்டும் என்பது உள்பட 21 அம்ச கோரிக்கைகளை புதுவை சுகாதாரத்துறை ஊழியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று அவர்கள் புதுவை அரசு ஆஸ்பத்திரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தர்ணாவுக்கு கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் ராஜ்குமார், வெற்றிவேல் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

ஒருங்கிணைப்பு குழுவின் கவுரவ தலைவர் கலைச்செல்வன், அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு பொதுச்செயலாளர் லட்சுமணசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். கூட்டு நடவடிக்கைக்குழு நிர்வாகிகள் ஜானகி, அன்புசெல்வன், பொறுப்பாளர்கள் வெற்றிவேல், நந்தகுமார், சாயிராபானு, வெங்கடேசன், பக்தவச்சலம் உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்