ஓமலூர் அருகே விபத்து: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து 4 பேர் காயம் - காட்டுப்பன்றி குறுக்கே சென்றதால் விபரீதம்
ஓமலூர் அருகே காட்டுப்பன்றி குறுக்கே சென்றதால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து 4 பேர் காயம் அடைந்தனர்.
ஓமலூர்,
ஓமலூர் அருகே காடையாம்பட்டி உம்பிளிகம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவாஜி கணேசன் (வயது 40). இவருடைய மனைவி வந்தனா (35). இவர்களுக்கு லோகேஸ் (7), தேசிங்கு (5) என்ற மகன்களும், அனுஷ்கா (4) என்ற மகளும் உள்ளனர். சேலத்தில் ஒரு ஓட்டலில் சிவாஜி கணேசன் மேலாளராகவும், அவரது மனைவி காடையாம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகிறார்கள்.
இந்தநிலையில், நேற்று காலை சிவாஜி கணேசன் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை பள்ளியில் இறக்கி விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வீட்டில் இருந்து நடுப்பட்டி நோக்கி வந்தார். அப்போது, திடீரென 5-க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் சாலையை வேகமாக கடந்தன. அதில் ஒரு காட்டுப்பன்றி மட்டும் சிவாஜி கணேசன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளில் குறுக்கே மாட்டிக்கொண்டது.
இதில் நிலைதடுமாறிய அவர்கள் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். அந்த காட்டுப்பன்றி அங்கிருந்து வனப் பகுதிக்குள் சென்றது. இந்த விபத்தில் சிவாஜி கணேசன், மனைவி வந்தனா, மகன் தேசிங்கு, மகள் அனுஷ்கா ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக காடையாம்பட்டியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சிவாஜி கணேசனின் குடும்பத்தினரை டேனிஷ்பேட்டை வனத்துறை அதிகாரிகள் சந்தித்து ஆறுதல் கூறி விசாரித்தனர். அப்போது, எந்த பகுதியில் இருந்து காட்டுப்பன்றிகள் வந்தன? என்பது குறித்து கேட்டறிந்தனர்.
சிவாஜி கணேசன்-வந்தனா தம்பதியின் மூத்த மகன் லோகேஸ், வீட்டின் அருகில் உள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்ததால், அவன் விபத்தில் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.