கே.வி.குப்பம் அருகே வீட்டுக்குள் அத்துமீறி புகுந்த அசாம் மாநில வாலிபர் அடித்துக்கொலை - உடல் கிணற்றில் வீச்சு
கே.வி.குப்பம் அருகே வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற அசாம் மாநில வாலிபர் அடித்துக்கொல்லப்பட்டார்.;
குடியாத்தம்,
கே.வி.குப்பம் அருகே வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற அசாம் மாநில வாலிபரை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மரத்தில் கட்டி வைத்து தாக்கி கொலை செய்தனர். பின்னர் அவரது உடல் கிணற்றில் வீசப்பட்டது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ளது கொசவன்புதூர் கிராமம். ஆந்திர மாநில எல்லை அருகே உள்ள இந்த கிராமத்தை சேர்ந்தவர் கலாநந்தன் (வயது 60). தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது வீடு அவருக்கு சொந்தமான நிலத்தில் தனியாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு அனைவரும் கதவை பூட்டிவிட்டு தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவுக்கு பின் அதிகாலை 2 மணியளவில் வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. இதனையடுத்து தூங்கிக்கொண்டிருந்த கலாநந்தன் கதவை திறந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளார்.
இதையடுத்து கலாநந்தன் சத்தம் போட்டுள்ளார். அந்த சத்தத்தை கேட்டு அருகில் வசிப்பவர்கள் கலாநந்தன் வீட்டிற்கு வந்துள்ளனர்.
அப்போது அவர்களை கண்டதும் மர்ம நபர் தப்பி ஓடி உள்ளார். அந்த நபரை அவர்கள் விரட்டி சென்று பிடித்தனர். பின்னர் அவர்கள் அந்த நபரை அங்குள்ள மரத்தில் கட்டி வைத்தனர். நள்ளிரவு நேரத்தில் கொள்ளையடிப்பதற்காக வந்திருக்கலாம் என கருதி அங்கு அவரை அனைவரும் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த நபர் பரிதாபமாக இறந்து போனார். போலீசாருக்கு பயந்த அவர்கள் உடனடியாக அவரது உடலை அருகில் இருந்த கிணற்றில் தூக்கி வீசி விட்டு தப்பிவிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சச்சிதானந்தம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இருதயராஜ், கவிதா உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த அடையாள அட்டையின் மூலம் இறந்த நபர் அசாம் மாநிலம் சிவசாகர் மாவட்டம் சேர்காப்பார் பகுதியில் உள்ள லட்சுமி நகரை சேர்ந்த கார்ப்பாலியா என்பவரது மகன் குஞ்சனன் (வயது 35) என்பது தெரிய வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக கே.வி.குப்பம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்த குஞ்சனன் கொள்ளையடிக்கும் நோக்கில் வந்தாரா? இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குஞ்சனன் கொலை குறித்து அசாம் மாநிலத்தில் உள்ள அவரது பெற்றோருக்கு போலீசார் தகவல் அளித்துள்ளனர். அவர்கள் வந்தவுடன் மேலும் பல தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து போலீசார் கூறுகையில், “குஞ்சனனை கொள்ளையன் என நினைத்து பொதுமக்கள் தாக்கியதில் அவர் இறந்து விட்டார். எனினும் அவர் கொள்ளையனா? என்பது குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். இறந்த குஞ்சனனின் பாக்கெட்டில் பேன்கார்டு, ஆதார்அட்டை, கனரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் உள்பட பல்வேறு ஆவணங்கள் உள்ளன. இது போன்ற ஆவணங்களுடன் கொள்ளை அடிப்பவர் வருவாரா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நாங்கள் விசாரித்து வருகிறோம்” என்றனர்.