வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு அமைச்சர் பேட்டி
பிற மாநிலங்கள், வெளி நாட்டில் இருந்து தமிழகத்திற்கு சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
அன்னவாசல்,
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள எண்ணை ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்து, பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவின் மருத்துவ தலைநகரம் தமிழ்நாடாக இருக்கும் நிலையில், பிற மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் தான் முதன்மை மருத்துவ சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்தாண்டு சுகாதார ஆய்வாளர்கள் 800 பேரை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய அரசு தமிழக அரசின் செயல்பாட்டை பார்த்து தமிழக சுகாதாரத்துறைக்கு ஒதுக்கியுள்ள ரூ.2,100 கோடி நிதியில் இந்த ஆண்டு பல்வேறு மருத்துவத்துறை சார்ந்த மேம்பாட்டு திட்டங்கள் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும்.
இதன்மூலம் உயர்தர புற்றுநோய் சிகிச்சை மையம், விபத்து காய சிறப்பு சிகிச்சை பிரிவு, சிறுநீரக சிகிச்சை மையம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை மையங்கள் உருவாக்கப்படும். தமிழகம் சுகாதார துறையில் சிறந்து விளங்கும் நிலையில், இந்த நிதியை பெற்று மேலும் மேம்படுத்தப்படுவதால் உலக நாடுகளுக்கு இணையாக தமிழக சுகாதாரத்துறை மேம்படும் என்பதில் ஐயமில்லை. இன்றைக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் புதுடெல்லியில் மத்திய அரசு முன்னிலையில் உலக வங்கி நிதியாக கொடுக்கும் ரூ.2,645 கோடி பெற ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கணேஷ் மற்றும் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.