‘சி.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணையை தடுப்பது நியாயம் அல்ல’ டி.டி.வி.தினகரன் பேட்டி
சி.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணையை தடுப்பது நியாயம் அல்ல என்று மம்தா பானர்ஜி போராட்டம் குறித்து டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
திருச்சி,
திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
நியாயம் அல்ல
கேள்வி: மேற்கு வங்காளத்தில் போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமாரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம் நடத்துவது குறித்து?
பதில்: இன்றைக்கு (அதாவது நேற்று) சுப்ரீம் கோர்ட்டு மேற்கு வங்காள மாநில போலீஸ் கமிஷனரை சி.பி.ஐ.யிடம் ஆஜராக உத்தரவிட்டுள்ளதை அறிந்தேன். காவல்துறை என்பது அரசாங்கத்தின் அங்கம்தான். மேற்கு வங்காளத்தில் அரசியலுக்காக ஏதோ நாடகங்கள் நடக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில்தானே சி.பி.ஐ. விசாரணை நடத்த சென்றுள்ளது. அதை தடுப்பது நியாயம் அல்ல.
கேள்வி: மம்தா பானர்ஜி நடத்திய போராட்டம் போன்று தமிழ்நாட்டிலும் நடந்திருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் சொல்லி இருப்பது பற்றி?
பதில்: அது அவருடைய கருத்தாக இருக்கலாம். தமிழ்நாட்டில் தலைமை செயலகத்தில் ஒரு சோதனை நடந்தபோது அனுமதி இருந்தது.
ஏன் சோதனையே நடக்கக்கூடாது என்கிறீர்களா?. ஒரு ஏஜென்சிக்கு (சி.பி.ஐ.) சோதனை நடத்த உரிமை இருக்கிறது. தமிழ்நாட்டில் முதன்மை செயலாளர் ராமமோகன்ராவ் வீட்டில் வருமானவரி சோதனை நடந்தது. சோதனையில் உள்நோக்கம் இருக்கலாம். அது வேறு. ஆனால், ஒரு ஏஜென்சியின் செயல்பாட்டை தடுக்க உரிமை கிடையாது. அதற்கு தனியாக ஒரு வழக்கு தொடுப்பார்கள். எனவே, தமிழ்நாட்டிலும் இதுபோல எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும் என கமல்ஹாசன் சொன்னது எனக்கு சரியாக தெரியவில்லை. வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி ராமமோகன்ராவ் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?. நான் முறைகேட்டில் ஈடுபட்டதாக எந்த ஆவணமும் கிடைக்கவில்லை என்று அவரே பேட்டி கொடுத்தாரே. சோதனை நடத்துவதில் எந்த தவறும் கிடையாது. அதே வேளையில் அரசாங்கங்கள் தங்களுக்கு கீழ் உள்ள ஏஜென்சியை தவறாக பயன்படுத்தக்கூடாது.
மக்கள் சிரிப்பார்கள்
கேள்வி: ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வாங்கி இருக்கிறாரே?
பதில்: அவருக்கு ஒரு நியாயம். அடுத்தவர்களுக்கு ஒரு நியாயம். ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து அ.தி.மு.க.வை காப்பாற்றுவதற்குதான் நான் எதிர்த்து வாக்களித்தேன் என்றுகூட பேசுவார். எனவே, ஓ.பன்னீர்செல்வத்தின் நியாயத்தை பற்றி மக்கள் பார்த்து கொள்வார்கள். மேலும் தேனி தொகுதி நாடாளுமன்ற பொதுமக்களும் பார்த்து கொள்வார்கள். அவருடைய மகன் போட்டியிடுவது குடும்ப அரசியல் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் சொன்னாரானால் பொதுமக்கள் அனைவரும் சிரிக்கத்தான் செய்வார்கள்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை
கேள்வி: அ.தி.மு.க.வில் சிலீப்பர் செல் இருப்பது உண்மைதான் என கே.பி.முனுசாமி கூறி இருக்கிறாரே?
பதில்: எம்.எல்.ஏ. தேர்தலில் கூட போட்டியிட்டு வெற்றிபெற முடியாதவர் முனுசாமி. அ.தி.மு.க. நிறுவனர்போல பேசி இருக்கிறார். எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் பூனைப் படைக்கு எடுபிடியாக இருந்தவர். அதுதான் உண்மை.
கேள்வி: வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா?
பதில்: நான் தான் எம்.எல்.ஏ.வாக இருக்கிறேனே. பின்னர் ஏன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும். போட்டியிட வேண்டிய தேவையில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்ப பிரிவு
தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசினார். இதில் மாநில அமைப்பு செயலாளர்கள் சாருபாலா தொண்டைமான், மனோகரன், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.