முத்துப்பேட்டை அருகே கொன்று புதைக்கப்பட்டவர் மாயமான மீனவர் போலீஸ் விசாரணையில் தகவல்
முத்துப்பேட்டை அருகே கொன்று புதைக்கப்பட்டவர் மாயமான மீனவர் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
முத்துப்பேட்டை,
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவானோடை கடல் மற்றும் அலையாத்திக்காட்டுக்கு செல்லும் பாதையில் கோரையாற்றின் நடுவே நடுதிட்டு என்ற மணற்பாங்கான பகுதி ஒன்று உள்ளது. நேற்றுமுன்தினம் இப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த மக்கள் அங்கு சென்று பார்த போது வாலிபர் ஒருவர் பிணம் பாதி அளவு மண்ணில் புதைந்த நிலையில் இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரை யாரோ சில மர்ம நபர்கள் கொலை செய்து பிணத்தை புதைத்தது தெரியவந்தது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. மேலும் கொலை நடந்து சுமார் 15 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் உடல் முற்றிலும் அழுகிய நிலையில் இருந்தது. இதனால் உடலை மண்ணில் இருந்து மீட்டு எடுக்க முடியாத நிலை இருந்தது.
இந்தநிலையில் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஜாம்புவானோடை மேலக்காடு பகுதியை சேர்ந்த மீனவர்
சிவக்குமார்(வயது35) தனது மனைவி நேசமணியுடன் ஏற்பட்ட மனவருத்தத்தில் வீட்டுக்கு செல்லாமல் நடுத்திட்டு பகுதியில் கூடாரம் அமைத்து தங்கி இருந்ததாகவும் அவரை 15 நாட்களுக்கு மேல் காணவில்லை என்ற தகவல் கிடைத்தது. இதனால் கொலை செய்யப்பட்ட நபர் மாயமான மீனவர் சிவக்குமாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் மாயமான மீனவர் சிவக்குமார் என்ற தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதைத்தொடர்ந்து திருத்துறைப்பூண்டி தாசில்தார் மகேஷ்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு இனிகோதிவ்யன் முன்னிலையில் பிணம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடைபெற்றது. சிவக்குமார் ஏன் கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தது யார்? என முத்துப்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.