நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க–காங்கிரஸ் கூட்டணிக்கு செல்ல மாட்டோம் பாரிவேந்தர் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க–காங்கிரஸ் கூட்டணிக்கு செல்ல மாட்டோம் என்று இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் கூறினார்.

Update: 2019-02-05 23:00 GMT
திருச்சி,


தேர்தலில் பணம் வாங்கி கொண்டு வாக்களிக்க கூடாது என எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி பாரதீய ஜனதா கூட்டணியில் அங்கம் வகித்தது. கூட்டணி தொடர்வதாக அக்கட்சியின் தலைமை அறிவித்து உள்ளது. ஆனால் தமிழகத்தில் உள்ளவர்கள் தோழமை கட்சியான எங்கள் பெயரை கூட கூறவில்லை.

எனவே பாரதீய ஜனதாவில் கொடுக்கப்படும் தொகுதிகள், எண்ணிக்கை எவ்வளவு என்பதை விட மரியாதையுடன் அழைத்தால் தான் கூட்டணி வைப்போம். இல்லை என்றால் இந்திய ஜனநாயக கட்சி தனித்து போட்டியிடும்.


தி.மு.க–காங்கிரஸ் கூட்டணிக்கு செல்ல மாட்டோம். டி.டி.வி. தினகரன் கட்சியுடனும் கூட்டணி கிடையாது. இந்திய ஜனநாயக கட்சி வளர்ச்சி பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. எங்களுக்கு பதவி முக்கியம் அல்ல. மக்கள் சேவையையே கடமையாக கொண்டு பணியாற்றி வருகிறோம். அ.தி.மு.க. செயல்பாடு பற்றி நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை. பாரதீய ஜனதா–அ.தி.மு.க. கூட்டணி அமைந்தால் அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது.

மேற்கு வங்காளத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சி.பி.ஐ.க்கு எதிராக செயல்பட்டு வருவது சரி அல்ல. மத்திய அரசுடனான மோதல் போக்கை அவர் கைவிட வேண்டும். இந்திய ஜனநாயக கட்சியின் மாநில மாநாடு மார்ச் மாதம் முதல் வாரம் திருச்சி பகுதியில் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.


நேற்று மாலை திருச்சியில் இந்திய ஜனநாயக கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நிறுவனர் பாரிவேந்தர் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க பாரிவேந்தருக்கு அதிகாரம் அளிப்பது, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும், உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும், பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, பொதுச்செயலாளர் ஜெயசீலன், பொருளாளர் ராஜன் உள்பட மாநில நிர்வாகிகள், திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் ராயர் டி. செல்வராஜ், கிழக்கு மாவட்ட தலைவர் செல்வகுமார், வடக்கு மாவட்ட செயலாளர் கருணாகரன், தெற்கு மாவட்ட செயலாளர் கனகராஜ், உப்பிலியபுரம் ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் ராஜ்குமார் உள்பட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்