பெரம்பலூரில் அறிவியல் கண்காட்சி சிறந்த படைப்புகளுக்கு பரிசு
பெரம்பலூரில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை, புதுடெல்லியில் உள்ள அறிவியல் தொழில்நுட்பத்துறை மற்றும் சென்னை அறிவியல் தொழில்நுட்ப மையம் ஆகியவை சார்பில் 2018–2019–ம் கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான அறிவியல் முறையில் புதிய கண்டுபிடிப்புகள் கண்காட்சி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நோக்கத்திற்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூரில் உள்ள தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. கண்காட்சியை முதன்மைக்கல்வி அதிகாரி அருளரங்கன் தொடங்கி வைத்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் வரவேற்றார். இதில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவ– மாணவிகளின் 27 படைப்புகள் இடம்பெற்றன.
இதில் திருச்சி அண்ணா தேசிய அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தை சேர்ந்த அலுவலர் ஜெயபால், சென்னை அறிவியல் தொழில்நுட்ப மையத் சேர்ந்த கிறிஸ் மேத்யூ ஆகியோர் உற்றுநோக்கு அலுவலர்களாக பணியாற்றினர். மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி பேராசிரியர் குமணன், இயற்பியல் பேராசிரியர், தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராஜ் ஆகியோர் மதிப்பீட்டாளர்களாக செயல்பட்டனர். இதில் துறைமங்கலம், டி.இ.எல்.சி. நடுநிலைப்பள்ளியின் 6–ம் வகுப்பு மாணவி ஜெயப்பிரியாவின் படைப்பான கரும்பில் ஒரு பரு கருணை சாகுபடி முறை காட்சி அரங்கு மாவட்ட அளவில் முதல் இடத்தை பெற்றது. அழகாபுரி ஆர்.சி. ஆரோக்கிய அன்னை நடுநிலைப்பள்ளியின் 8–ம் வகுப்பு மாணவன் தீபக்ராஜூவின் உயிரி ஆற்றல் என்ற படைப்பும், என்.புதூர் நடுநிலைப்பள்ளியின் 8–ம் வகுப்பு மாணவன் சந்தோஷம் உருவாக்கிய காற்று மாசுபாடு என்ற படைப்பும் 2–வது இடம் பிடித்துள்ளது.
நூத்தப்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி ஜெயபாரதியின் படைப்பான மண்புழு உரம் காட்சி அரங்கு, விஜயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் 7–ம் வகுப்பு மாணவன் ஜெகன்ராஜீவின் உயிரி நெகிழி என்ற படைப்பு, பிரம்மதேசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் 8–ம் வகுப்பு மாணவி கவுசிகாவின் வாகன பாதுகாப்பு படைப்பு ஆகியவை 3–ம் இடம் பிடித்தன.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இக்கண்காட்சியில் முதல் மற்றும் 2–வது இடங்களில் வெற்றி பெற்றுள்ள மாணவர்கள் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் கலந்துக் கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.