பட்ஜெட் தாக்கல் குறித்து அரசு உயர்அதிகாரிகளுடன் நாராயணசாமி ஆலோசனை
முதல்–அமைச்சர் நாராயணசாமி தான் வகித்து வரும் உள்துறை, சட்டம், பொதுநிர்வாகம் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி,
2018–19 ம் நிதியாண்டு அடுத்த மாதம் நிறைவடைய உள்ள நிலையில் முதல்–அமைச்சர் நாராயணசாமி பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி அவர் நேற்று தான் வகித்து வரும் உள்துறை, சட்டம், பொதுநிர்வாகம் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா, அரசு செயலாளர்கள் அன்பரசு, கந்தவேலு, பார்த்திபன் மற்றும் கூடுதல் செயலாளர் சுந்தரேசன், சிறைத்துறை ஐ.ஜி. பங்கஜ்குமார் ஜா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, அதில் செலவிடப்பட்ட தொகை, மீதமுள்ள தொகையை செலவிட வேண்டிய விதம், அரசுத்துறைகள் மூலம் வருமானம் ஈட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாகவும், அதற்கு தேவையான நிதி தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.