பெரம்பலூரில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்
பெரம்பலூரில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
பெரம்பலூர்,
சாலை பாதுகாப்பு வார விழா நேற்று முதல் வருகிற 10-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் இதன் மூலமாக சாலை விதிகளை முறையாகப் பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும். சாலைகளை கடக்கும் போதும், வாகனங்களில் பயணிக்கும் போதும் மிகுந்த பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, நடைபெற்று வருகிறது. சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி பெரம்பலூர் போக்குவரத்துத்துறையின் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் பாலக்கரை ரவுண்டானா அருகே நடந்தது.
இதனை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர். இந்த ஊர்வலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள், அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், ஓட்டுனர் பயிற்சிப்பள்ளிகளை சேர்ந்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சாலை விதிகளை முறையாக பின்பற்றவும், வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசக்கூடாது. மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது. தலைக்கவசம் (ஹெல்மெட்) உயிர்கவசம். படியில் பயணம் நொடியில் மரணம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் நகரை வலம் வந்து ரோவர் ஆர்ச்சில் ஊர்வலத்தை முடித்து கொண்டனர்.
இதேபோல் பெரம்பலூர் மாவட்ட போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஹெல்மெட் அணிந்து ஓட்டிய இரு சக்கர வாகனங்களின் ஊர்வலமும் நடந்தது. இந்த ஊர்வலம் ரோவர் ஆர்ச், சங்குப்பேட்டை, கடைவீதி வழியாக சென்று பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. பாலக்கரையில் விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கிய போது, அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் பயணித்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட்டுகள் வழங்கப்பட்டது. மேலும், சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபர் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருளரங்கன், அரசு போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் புகழேந்திரன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செல்வராஜ் (நிலை-1), பெரியசாமி (நிலை-2), அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.