வல்லநாடு சரணாலயத்தில் வெளிமான்கள் எண்ணிக்கை 250 ஆக அதிகரிப்பு - வனச்சரகர் விமல்குமார் தகவல்
வல்லநாடு சரணாலயத்தில் வெளிமான்களின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்து உள்ளது என்று வனச்சரகர் விமல்குமார் தெரிவித்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா வல்லநாட்டில் 1641 ஹெக்டர் பரப்பில் வெளிமான் சரணாலயம் அமைந்து உள்ளது. இந்த சரணாலயத்தில் தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர்(பொறுப்பு) திருமால் உத்தரவின் பேரில் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி நடந்தது. இதில் வனச்சரகர் விமல்குமார் தலைமையில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மாணவர்கள், வனஉயிரின ஆர்வலர்கள் 75 பேர் கலந்து கொண்டு வனவிலங்குகளை கணக்கெடுத்தனர். இந்த கணக்கெடுக்கும் பணி நேற்று முன்தினம் முடிவடைந்தது.
இதுகுறித்து தூத்துக்குடி வனச்சரகர் விமல்குமார் கூறியதாவது:-
வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. இதில் வெளிமான்களின் எண்ணிக்கை 230-ல் இருந்து 250 ஆக அதிகரித்து உள்ளது. இதே போன்று புள்ளிமான்கள் 50, கடமான்கள் 35-ம் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. எறும்புத்தின்னி, முள்ளம்பன்றி, குள்ளநரி, முயல் உள்ளிட்ட விலங்குகளும் காணப்படுகின்றன. சரணாலயத்தில் ஒட்டுமொத்தமாக 2 சதவீதம் வரை வனவிலங்குகள் அதிகரித்து உள்ளன.இதற்கு பொதுமக்களிடம் ஏற்பட்டு உள்ள விழிப்புணர்வு முக்கிய காரணமாக அமைந்து உள்ளது.
ஏதேனும் விலங்குகள் பாதிக்கப்பட்டு இருந்தால் உடனடியாக வனத்துறைக்கு மக்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர். அதே போன்று வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில், வறட்சி காலத்தில் வெளிமான்கள் தண்ணீருக்காக வெளியில் செல்வதை தடுப்பதற்கு 12 தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆழ்துளை கிணறுகள் அமைத்து சூரிய ஒளி மின்சாரம் மூலம் மோட்டாரை இயக்கியும், ஆயில் மோட்டார்கள் மூலமும் தண்ணீர் தொட்டிகளில் நிரப்பப்பட்டன. மேலும் டேங்கர் லாரிகள் மூலமும் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு மான்களுக்கு வழங்கப்பட்டது. மான்கள் மேய்வதற்காக 40 ஹெக்டர் பரப்பில் புல்வெளி உருவாக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.