காஞ்சீபுரம் வட்டார போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு வாரவிழா

காஞ்சீபுரம் வட்டார போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழாவை கலெக்டர் பா.பொன்னையா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2019-02-04 23:00 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் சாலை பாதுகாப்பு வாரவிழா இன்று காலை நடந்தது. இதில், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழாவில், காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்ஹதிமானி, காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்பிரமணியன், காஞ்சீபுரம் வட்டார போக்குவரத்து அதிகாரி ஆர்.பி.செந்தில்குமார், செங்கல்பட்டு வட்டார அதிகாரி நடராஜன், காஞ்சீபுரம் தாசில்தார் காஞ்சனாமாலா, மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், பயிற்சி ஓட்டுநர்கள், வாகன விற்பனை பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டவர்கள், தலை கவசம் உயிர் கவசம், தலைகவசம் அணிவீர் உயிர் இழப்பை தவிர்ப்பீர், உரிமம் வாங்க 8 போடு, உயிரை காக்க ஹெல்மெட் போடு, சாலையில் அலைப்பேசி ஆபத்தாகும் என நீ யோசி. மது அருந்தி வாகனம் ஓட்டாதீர் உள்ளிட்ட சாலை பாதுகாப்பு ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பேரணியில் ஏந்திக்கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்றனர். சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி நடைபெற்ற இந்த பேரணி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

மேலும் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 3 வட்டார போக்குவரத்து அலுவலர்களின் சாலை பாதுகாப்பு வார விழாவும் இதில் இணைந்து நடந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்