விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி- முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்

விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியை முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2019-02-04 22:45 GMT
விழுப்புரம், 

பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கவும், மேம்படுத்தவும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், விழுப்புரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மற்றும் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை சார்பில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நேற்று விழுப்புரம் அரசு மகளிர்மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கண்காட்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தொடங்கி வைத்து பார்வை யிட்டார். இதில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் 53 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது அறிவியல் படைப்புகளை பார்வைக்காக வைத்திருந்தனர்.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி கூறுகையில், இந்த கண்காட்சியில் சிறந்த படைப்புகளை உருவாக்கிய மாணவர்கள் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தால் நடத்தப்படும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் கலந்துகொள்வார்கள். மாநில அளவிலான கண்காட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் புதுடெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் கலந்து கொள்வார்கள் என்றார். கண்காட்சியில் மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தன், மாவட்ட உடற்கல்வி இயக்குனர் பத்மநாபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்