போலீஸ்நிலையங்களில் நிலுவையில் உள்ள 19 மனுக்கள் மீது உடனடி தீர்வு

திருப்பத்தூர் உட்கோட்டத்திற்கு உள்பட்ட போலீஸ்நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, அதில் 19 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.

Update: 2019-02-03 22:00 GMT

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் உட்கோட்டத்திற்குட்பட்ட போலீஸ்நிலையங்களில் கொடுககப்பட்ட புகார் மனுககளுககு நேற்று திருப்பத்தூர் செல்வி வேலுநாச்சி மண்டபத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாத்துரை தலைமையில் பெட்டிசன் மேளா எனப்படும் நிலுவை மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது.

இதில் திருப்பத்தூர், திருககோஷ்டியூர், சிங்கம்புணரி, எஸ்.வி.மங்கலம், எஸ்.எஸ்.கோட்டை, கீழச்சிவல்பட்டி, கண்டவராயன்பட்டி, பூலாங்குறிச்சி, உலகம்பட்டி, நெற்குப்பை உள்ளிட்ட 13 போலீஸ்நிலையங்களில் கொடுககப்பட்ட 33 புகார் மனுககள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அதில் புகார் மனுதாரர்கள் மற்றும் புகார்களில் சம்பந்தப்பட்டவர்கள் என இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் 19 மனுககளுககு உடனடி தீர்வு காணப்பட்டது.

இதில் திருப்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெகடர் ஆனந்தி, எஸ்.வி.மங்கலம் இன்ஸ்பெகடர் கவிதா, எஸ்.எஸ்.கோட்டை இன்ஸ்பெகடர் பொன்ரகு, உலகம்பட்டி இன்ஸ்பெகடர் முத்துககுமார் மற்றும் சப்–இன்ஸ்பெக்டர்கள் உள்பட போலீசார் கலந்த கொண்டனர்.

மேலும் செய்திகள்