ஆரணியில் அண்ணா நினைவு நாள்
ஆரணியில் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. உள்பட பல்வேறு கட்சிகள் சார்பில் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
ஆரணி,
ஆரணி நகர அ.தி.மு.க. சார்பில், முன்னாள் முதல் - அமைச்சர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி மாவட்ட அவைத்தலைவர் ஜெமினி கே.ராமச்சந்திரன் தலைமையில், எம்.ஜி.ஆர். சிலை அருகில் இருந்து அலங்கரிக்கப்பட்ட அண்ணா உருவப்படத்துடன் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் மார்க்கெட் ரோடு, காந்திரோடு வழியாக சென்று, தச்சூர் சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கோவிந்தராசன் மாலை அணிவித்தார்.
நகராட்சி வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு நகர அவைத்தலைவர் ஜோதிலிங்கம் மாலை அணிவித்தார். இதில் வேலூர் ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, அரசு வக்கீல் கே.சங்கர், நகர செயலாளர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர்கள் பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு, மாவட்ட துணை செயலாளர் டி.கருணாகரன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் கஜேந்திரன், கூட்டுறவு சங்க தலைவர்கள், கட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
தி.மு.க. சார்பில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.சிவானந்தம் தலைமையில் அண்ணா சிலை அருகில் இருந்து கட்சி நிர்வாகிகளோடு நகரின் முக்கிய வீதிகள் வழியாக அண்ணா உருவப்படத்துடன் ஊர்வலமாக சென்றனர். அண்ணா சிலை வந்தடைந்ததும் ஆரணி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் வக்கீல் பரந்தாமன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. தயாநிதி, நகர செயலாளர் ஏ.சி.மணி, ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், தட்சணாமூர்த்தி, வெள்ளைகணேசன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
ஆரணி தொகுதி புதிய நீதிக்கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில், எம்.ஜி.ஆர். சிலை அருகில் இருந்து அலங்கரிக்கப்பட்ட அண்ணா உருவப்படத்துடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நிர்வாகிகளுடன் அண்ணா சிலை வரை ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் மண்டல செயலாளர் ஏ.சி.பாபு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் தினேஷ்பாபு, நகர செயலாளர் கணேசன், ஒன்றிய செயலாளர் புருஷோத்தமன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
தே.மு.தி.க. நகர செயலாளர் ஜெ.சுந்தர்ராஜன் தலைமையில் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் சரவணன், ஒன்றிய துணை செயலாளர் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் ஜான்பாஷா அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.
ம.தி.மு.க. நகர செயலாளர் எஸ்.கே.ரத்தினகுமார் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.