நர்சுகளின் புதிய அனுபவம்

அமெரிக்காவில் ஒரே மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஏழு நர்சுகள் பிரசவத்தில் புதுமையான அனுபவத்தை பெற்றிருக்கிறார்கள். அவர்கள் அடுத்தடுத்த மாதங்களில் குழந்தைகளை பெற்றிருக்கிறார்கள்.;

Update: 2019-02-03 12:10 GMT
மெரிக்காவில் ஒரே மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஏழு நர்சுகள் பிரசவத்தில் புதுமையான அனுபவத்தை பெற்றிருக்கிறார்கள். அவர்கள் அடுத்தடுத்த மாதங்களில் குழந்தைகளை பெற்றிருக்கிறார்கள். கருத்தரித்தது முதல் பிரசவம் வரை ஒருவருக்கொருவர் கர்ப்ப கால தகவல்களை பரிமாறியும் வந்திருக்கிறார்கள். அது பிரசவத்திற்கு உதவிகரமாக இருந்ததாகவும் தற்போது குழந்தை வளர்ப்பிற்கும் பயனுள்ளதாக இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

இந்த நர்சுகள் அனைவரும் மகப்பேறு பிரிவில் பணிபுரிபவர்கள். இவர்கள் அனைவருக்கும் ஐந்து மாத இடைவெளியில் குழந்தை பிறந்திருக்கிறது. ஒரே சமயத்தில் கைக்குழந்தைகளுடன் பணிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த குழந்தைகளை பராமரிப்பதற்காக ஒரு குழுவை தொடங்கி இருக்கிறார்கள். அதில் ஒருவருக்கொருவர் குழந்தை வளர்ப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.

‘‘எங்களுக்கு இப்படி அடுத்தடுத்து குழந்தைகள் பிறக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நம்பவும் முடியவில்லை. கர்ப்ப காலத்தில் மற்றவர்கள் எதிர்கொண்ட சந்தோஷங்கள், சிரமங்களை பகிர்ந்து கொண்டது மனதிற்கு ஆறுதலாக இருந்தது. ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்களை சொல்லும்போது அதை கேட்பதற்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. மருத்துவ மனையில் எத்தனையோ குழந்தைகளை பராமரித்துக்கொண்டிருக்கிறோம். எங்கள் குழந்தைகளை ஒரே நேரத்தில் பார்த்துக்கொள்வது புது அனுபவமாக இருக்கிறது. நாங்கள் ஒன்றுபட்டு செயல்படுவதால் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதற்கும் சிரமங்கள் இருக்காது ’’ என்கிறார்கள்.

நர்ஸ்கள் அனைவரும் குழந்தைகளை கைகளில் தூக்கிக்கொண்டு போஸ் கொடுப்பது சமூக வலைத்தளங்களில் பரவலாகிக்கொண்டிருக்கிறது.

மேலும் செய்திகள்