மத்திய அரசின் விலை ஆதார திட்டத்தின்கீழ் விவசாயிகளிடம் இருந்து உளுந்து கொள்முதல் கலெக்டர் தகவல்
மத்திய அரசின் விலை ஆதார திட்டத்தின் கீழ் விவசாயிகளிடம் இருந்து உளுந்து கொள்முதல் செய்யப்படவுள்ளது என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
அரியலூர்,
மத்திய அரசின் விலை ஆதார திட்டத்தின் கீழ் கடந்த 2018-19-ம் நிதியாண்டில், ராபி பருவத்தில் அரியலூர், தூத்துக்குடி, நெல்லை, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களை சார்ந்த விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதார விலையான கிலோ ஒன்றிற்கு ரூ.56 என்ற அளவில் உளுந்து அரசால் கொள்முதல் செய்யப்படவுள்ளது. நடப்பு ராபி பருவத்தில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படும் உளுந்து பிப்ரவரி முதல் ஏப்ரல் 2019 வரை கொள்முதல் செய்யப்படும். அதற்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் நிலச்சிட்டா அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு ஆகிய விவரங்களுடன் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இந்த திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படவுள்ள உளுந்து இதர பொருட்கள் கலப்பு- அதிகபட்ச வரம்பு (சதவீத எடையளவு குவிண்டாலுக்கு) 2 சதவீதம், இதர தானியங்கள் கலப்பு- அதிகபட்ச வரம்பு 3 சதவீதம், சேதமடைந்த பருப்புகள்- அதிகபட்ச வரம்பு 3 சதவீதம், சிறிதளவு சேதமடைந்த பருப்புகள்- அதிகபட்ச வரம்பு 4 சதவீதம், முதிர்வடையாத மற்றும் சுருங்கிய பருப்புகள்- அதிகபட்ச வரம்பு 3 சதவீதம், வண்டுகள் தாக்கிய பருப்புகள்- அதிகபட்ச வரம்பு 4 சதவீதம், ஈரப்பதம்- அதிகபட்ச வரம்பு 12 சதவீதம் ஆகிய தரத்தில் இருத்தல் வேண்டும்.எனவே நடப்பு ராபி பருவத்தில் உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மேற்கண்ட திட்டத்தில் சேர்ந்து கிலோ ஒன்றுக்கு ரூ.56 வீதம் பெற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேற்கொண்டு தகவலுக்கு விவசாயிகள் ஜெயங்கொண்டம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தினை அணுகி பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.