மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் முகாம்
காஞ்சீபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சீபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மண்டல துணை தாசில்தார் பூபாலன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு முகாமில், சமூக நலத்துறை தனிதாசில்தார் கவிதா கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை பெற்றார். உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 15 பேருக்கு கல்வி உதவித்தொகை, 4 பேருக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிதியுதவி, ஒரு நபருக்கு மருத்துவ உதவித்தொகை, 3 பேருக்கு காதொலி கருவிகள் என மொத்தம் ரூ.1 லட்சத்து 17ஆயிரத்து 750 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பேச்சு பயிற்சி மற்றும் கேட்பியல் நிபுணர் பிரபாகரன் கலந்து கொண்டு சிகிச்சை முறைகள், நலத்திட்ட உதவிகள் குறித்து விளக்கினார். இதில், வருவாய் ஆய்வாளர்கள் பிரகாஷ், சீனிவாசன், ரமேஷ், சந்திரசேகர், இந்திராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.