தென்மும்பையில் வழிப்பறி செய்து வந்த 3 பேர் சிக்கினர்

தென்மும்பை பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-01-31 22:34 GMT
மும்பை,

உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒருவர் அண்மையில் மும்பை பாத்தே பாபுராவ் மார்க் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் அந்த நபரை வழிமறித்தனர். திடீரென அவர்கள் அவரை சரமாரியாக தாக்கி விட்டு அவரிடமிருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதையடுத்து அந்த நபர் டி.பி.மார்க் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். இதேபோல் அதே இடத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி டாக்சி டிரைவர் ஒருவரிடமும் வழிப்பறி நடந்தது.

3 பேர் கைது

இந்த 2 சம்பவத்திலும் ஒரே கும்பல் தான் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இந்தநிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் அவினாஷ் அசோக் (வயது 28), சாருக் அப்துல் ரபி ஷேக் (22) மற்றும் சன்னி ராம்தாஸ் வால்மிகீ (19) என்பது தெரியவந்தது.

பிடிபட்ட 3 பேரும் தென்மும்பை பகுதிகளில் வழிப்பறி உள்பட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். கோர்ட்டு அவர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்