சாலைகளை சீரமைக்கக்கோரி எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் மனு தி.மு.க. சார்பில் நடந்த கிராம சபை கூட்டத்தில் வழங்கப்பட்டது
தி.மு.க. சார்பில் நடந்த கிராம சபை கூட்டத்தில் சாலைகளை சீரமைக்கக்கோரி எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் மனு அளித்தனர்
அச்சரப்பாக்கம்,
காஞ்சீபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பள்ளிப்பேட்டை, சீதாபுரம், திருமுக்காடு, பெறும்பேர்கண்டிகை, கடமலைபுத்தூர், எடையாளம், தொழுப்பேடு, ஆத்தூர் ஆகிய ஊராட்சிகளில் தி.மு.க சார்பில் கிராம சபை கூட்டம் நடந்தது. காஞ்சீபுரம் நாடாளுமன்ற தி.மு.க. பொறுப்பாளர் வைத்தியலிங்கம் தலைமை தாங்கினார். மதுராந்தகம் எம்.எல்.ஏ. புகழேந்தி முன்னிலை வகித்தார். தி.மு.க. ஊராட்சி செயலாளர்கள் வரவேற்று பேசினர்.
தி.மு.க. ஒன்றிய செயலாளர் கண்ணன், ரத்னவேல், கோகுலகண்ணன், எழிலரசன், சுந்தரவரதன், வரதராஜன், ரவி, சிவக்குமார், நீலமேகம், பேக்கரிரமேஷ், தி.மு.க. ஒன்றிய மகளிரணி செயலாளர் மாலதி, தட்சணாமூர்த்தி, பெரியசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். பொதுமக்கள் தங்கள் ஊராட்சியில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று எம்.எல்.ஏவிடம் மனுக்களை வழங்கினர்.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பெரியபாளையம், கொசவன்பேட்டை, பனையஞ்சேரி, 82 பனப்பாக் கம், வடமதுரை ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடந்தது. இதற்கு தலைமை செயற்குழு உறுப்பினரும், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பி.ஜே.மூர்த்தி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மாநில சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், திருவள்ளூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கும்மிடிப்பூண்டி வேணு ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். மேலும், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து குறிப்பு எடுத்துக்கொண்டனர். அப்போது கிராம மக்கள் தங்களது பகுதிக்கு பஸ் வசதி இல்லை, சாலை வசதி இல்லை, மின்விளக்கு வசதி இல்லை, குடிநீர் வசதி இல்லை, ரேஷன் பொருட்கள் சரிவர வழங்கப்படுவதில்லை.
தேசிய ஊரக வளர்ச்சி திட்டப்பணி சரிவர வழங்குவதில்லை, இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றியதற்கு உரிய சம்பளம் கிடைக்கவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை குறைகளாக கூறினர். இதில் ஊராட்சி தி.மு.க. செயலாளர்கள் மொய்தீன், சுப்பிரமணி, பனையஞ்சேரி ரமேஷ், ரவி, கருணா, பெரியபாளையம் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.