போதிய மழை பெய்யாததால் பெரம்பலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்
போதிய மழை பெய்யாததால் பெரம்பலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் (பொறுப்பு) அழகிரிசாமி தலைமை தாங்கி விவசாயிகள் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ரமேஷ் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் படைப்புழுவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரண தொகை போதுமானதாக இல்லை. ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கவேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தில் கூடுதலான நாட்கள் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும். போதிய மழை பெய்யாததால் பெரம்பலூரை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகள் வாங்கி உள்ள கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். வீட்டுமனை பட்டாக்கள் அரசு வழங்க வேண்டும் என்றார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயராமன் பேசுகையில், போதிய மழை பெய்யாததால் பாதிக்கப்பட்ட பருத்தி, சின்ன வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைக்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தமிழ்நாடு பாமாயில் மர சாகுபடியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் முருகேசன் பேசுகையில், பெரம்பலூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் வைக்கோல் மானிய விலையில் கிடைத்திடவும், கால்நடைகளுக்கு தீவன வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களின் அருகே உள்ள மின்மாற்றிகளை சுற்றி வளர்ந்துள்ள செடி, கொடிகள், முட்புதர்களை அகற்ற வேண்டும் என்றார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜூ பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றார். திருவள்ளுவர் உழவர் மன்ற தலைவர் பூலாம்பாடி வரதராஜன் பேசுகையில், நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரண தொகையை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் புத்தக திருவிழாவை நடத்த வேண்டும் என்றார்.
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் ராஜேந்திரன் பேசுகையில், போதிய அளவு மழை பெய்யாததால் பெரம்பலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அரும்பாவூர் உள்ளிட்ட 7 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். விவசாயிகளுக்கு சைடு போர் போடுவதற்கு கடனுதவி பெற்று தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு அரசு நிவாரணம் பெறும் விவசாயிகள் எவ்வளவு பேர் என்ற விவரத்தை அறிவிக்க வேண்டும். மக்காச்சோளத்திற்கு தமிழக அரசு அறிவித்த நிவாரண நிதி போதாது. கூடுதலாக நிவாரண நிதி வழங்க வேண்டும். 2015-16, 2016-17-ம் ஆண்டுகளில் அரவை பருவத்தில் பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையினை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். அந்த சர்க்கரை ஆலையில் அறிவிக்கப்பட்ட இணை மின் உற்பத்தி திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
பெரம்பலூரில் இருந்து கீழமுத்தூர் வரை இயக்கப்பட்ட அரசு பஸ்சை மீண்டும், அதே வழித்தடத்தில் இயக்க வேண்டும் என்றார். தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் நீலகண்டன் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் கரும்பு, மக்காச்சோளம், வெங்காயம் ஆகிய பயிருக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றார். கூட்டத்தில் விவசாயிகள் பலர் போதிய மழை பெய்யாததால் பெரம்பலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.
இதில் திட்ட இயக்குனர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதர், வேளாண்மை இணை இயக்குனர் இளவரசன், பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்னுலாப்தீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கலைவாணி, வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம் மற்றும் மாநிலத் திட்டம்) ராஜசேகரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள் மற்றும் தணிக்கை) பாரதிதாசன் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.