தஞ்சையில் தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் சுகாதாரத்துறை இணை இயக்குனர் தொடங்கி வைத்தார்

தஞ்சையில் தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலத்தை சுகாதாரத்துறை இணை இயக்குனர் தொடங்கி வைத்தார்.

Update: 2019-01-31 22:45 GMT
தஞ்சாவூர்,

மகாத்மாகாந்தியின் நினைவு நாள் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தஞ்சை மாவட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஊர்வலம், முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தஞ்சை தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழிஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட கூடுதல் முதன்மை நீதிபதி பூர்ணஜெயஆனந்த் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சிவசுப்பிரமணிய சேகர் முன்னிலை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட தொழுநோய் துணை இயக்குனர் டாக்டர் குண சீலன் கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட தொழுநோய் அலுவலக மருத்துவ மேற்பார்வையாளர்கள் பாஸ்கரன், செல்வம், சுகாதார ஆய்வாளர்கள் இளந்திரையன், தமிழ்ச்செல்வன், ஜெயக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

இதில் அவர் லேடி செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் மற்றும் பல்வேறு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகள், சுகாதார அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்