புத்தாநத்தம் அருகே சாலையை சீரமைக்க கோரி மாணவ-மாணவிகள் மறியல்
புத்தாநத்தம் அருகே சாலையை சீரமைக்க கோரி மாணவ-மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர்.
மணப்பாறை,
திருச்சி மாவட்டம், புத்தாநத்தத்தை அடுத்த கருமலை அருகே உள்ளது அலங்கம்பட்டி. இந்த பகுதியில் இருந்து மணப்பாறை - துவரங்குறிச்சியை இணைக்கும் சாலை பணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. அப்போது, சாலை தோண்டப்பட்டது. அதன் பின்னர் அப்பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும், வேலைக்கு சென்று வரும் தொழிலாளர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து படுகாயம் அடையும் நிலை ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் நேற்று மாலை மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த புத்தாநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து உரிய உத்தரவாதம் அளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என்று கூறி பொதுமக்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் மருங்காபுரி தாசில்தார் முகமது ரபீக் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக சாலையை சரிசெய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.