ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஓட்டுரிமை கிடையாது என்று கூற நீதிபதிகளுக்கு அதிகாரம் இல்லை தளவாய்சுந்தரம் பேட்டி
தமிழகத்தில் நீதிமன்றங்களின் தலையீடு அதிகமாக இருப்பதாகவும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஓட்டுரிமை கிடையாது என்று கூற நீதிபதிகளுக்கு அதிகாரம் இல்லை என்றும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்.
கருங்கல்,
குமரி மாவட்டம் திருவட்டார் ஒன்றிய அலுவலக வளாகத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஊரக புறக்கடை கோழி வளர்ப்பு திட்ட தொடக்க விழா நேற்று நடைபெற்றது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகளை வழங்கினார். 1,200 பயனாளிகளுக்கு ரூ.44.28 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டன.
கூட்டத்திற்கு பிறகு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆக்கிரமிப்புகள் செய்திருப்பவர்களுக்கு ஓட்டு போடும் உரிமை கிடையாது என்று நீதிபதிகள் கூறுகிறார்கள். நீதிபதிகளுக்கு ஒரு வரம்பு இருக்கிறது. அந்த வரம்புக்குள்ளாக அவர்கள் செயல்பட வேண்டும் என்பது தான் எங்களின் எண்ணம். ஆனால், அந்த வரம்பை மீறி செயல்படுகிறார்கள். பொதுவாக ஒருவர் ஆக்கிரமிப்பு செய்திருந்தால், அவர்களை அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்த உத்தரவிடலாம். அவர்கள், அங்கிருந்து வெளியேறாவிட்டால் போலீசார் மூலம் வெளியேற்றலாம். ஆனால், ஓட்டு உரிமை கிடையாது என்று சொல்வதற்கு அவர்களுக்கு அதிகாரம் கிடையாது. ஆக நீதிமன்றங்களின் தலையீடு தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கிறது, என்பது எனது கருத்து.
இதுசம்பந்தமாக நாங்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.