வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-30 23:00 GMT
திருவாரூர்,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். 5 ஆயிரம் பள்ளிகள் மூடும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று நடந்த வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், அரசு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர்.

சங்கங்களின் நிர்வாகிகள் பைரவநாதன், செல்வமணி, வீரமணி, தமிழ்செல்வன், சின்னையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்