பயிர்க் காப்பீட்டு தொகையை வழங்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பயிர்க் காப்பீட்டு தொகையை வழங்கக் கோரி தஞ்சையில், விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த கள்ளப்பெரம்பூர், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், சீராளூர், சக்கரைசாமந்தம், வடகால், வெண்ணலோடை ஆகிய 7 கிராமங்களை சேர்ந்த 15–க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று தஞ்சை மேலவீதியில் உள்ள மத்திய கூட்டுவு வங்கிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் வங்கி அதிகாரிகளை நேரில் சந்தித்து, 2017–18–ம் ஆண்டிற்கான பயிர்க்காப்பீட்டு தொகையை எப்போது வங்கி கணக்கில் வரவு வைப்பீர்கள். 1 ஏக்கருக்கு எவ்வளவு காப்பீட்டுத்தொகை வழங்கப்படும் என கேட்டனர்.
அதற்கு காப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். 1 ஏக்கருக்கு எவ்வளவு தொகை உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. இதனால் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த விவசாயிகள் திடீரென பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் விவசாயிகள் சிலர் கூறியதாவது:–
கள்ளப்பெரம்பூர் உள்ளிட்ட 7 கிராமங்களை சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் 2017–18–ம் ஆண்டிற்கான பயிர்க் காப்பீடு செய்து இருந்தோம். தஞ்சை மாவட்டத்திற்கு பயிர்க் காப்பீட்டு தொகையை ரூ.112 கோடி வரப்பெற்றுள்ளது. தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கிக்கு ரூ.54 கோடி வந்துள்ளது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், ஆன்லைன் மூலம் பயிர்க் காப்பீடு செலுத்திய விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இதுவரை பயிர்க் காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. 2 மாதங்கள் ஆகியும் 7 கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு தொகை வழங்கப்படாததால் முறைகேடு நடக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே காலதாமதத்திற்கு வட்டியுடன் சேர்த்து பயிர்க் காப்பீட்டு தொகையை விரைவில் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.