வானவில்: கவனம் சிதையாமல் இருக்க உதவும் ஹெட் செட்
எல்லோருக்குமே கவனக் குறைபாடு என்பது பொதுவான விஷயம். குறிப்பாக பள்ளிக் குழந்தைகளுக்கு ஆசிரியர் பாடம் நடத்தும் போது கவனம் சிதறாமல் இருப்பது சற்று கடினமான ஒன்று.
இந்த பிரச்சினைக்கு உதவுவதற்காக நியூரோ பிளஸ் என்ற ஒரு ஹெட்செட்டை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
சாதாரணமானவர்களுக்கு மட்டுமின்றி சிந்திப்பதில் குழப்பம் மற்றும் கவனிப்பதில் சிரமம் இருப்பர்வர்களான ADHD பிரச்சினை உள்ளவர்களுக்கும் இது மிகவும் பயன்படும்.
இதை அணிந்துக் கொண்டால் சென்சார் மூலம் மூளையின் அலைகளை கண்காணிக்கும். ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரு இயங்குதளங்களில் உள்ள கேம்களை இதை அணிந்து கொண்டு விளையாடலாம். அப்படி விளையாடும் போது எங்கேனும் கவனம் சிதறினால் அவ்வப்போது அறிவுறுத்தும்.
இதனால் இம்மியளவும் திசை மாறாமல் கவனிக்க முடியும். நாளடைவில் அதுவே பழக்கமாகி அவர்கள் தெளிவாக புரிந்து கொள்ளவும், ஒருமுகமாக ஆழ்ந்து கவனிக்கவும் பழக்கிவிடுகிறது இந்த நியூரோ பிளஸ்.