வானவில்: முகம் பார்க்கும் கண்ணாடியில் இவ்வளவு விஷயங்களா?
இளையவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்ணாடி முன்னர் அதிக நேரம் செலவிடுகிறோம்.
கண்களுக்கு அலங்காரம் செய்யும் போது நல்ல தரத்தில் கண்ணாடி இருப்பது அவசியம். இந்த ஐ ஹோமோ வேனிட்டி கண்ணாடி மிக துல்லியமாக நம் முகத்தைக் காட்டும். மேலும் தெளிவாக தெரிவதற்காக எல்.இ. டி விளக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளன. நாம் அலங்காரம் செய்யும் போது இனிமையான பாடலைக் கேட்டு கொண்டே நம் வேலையை பார்க்கலாம்.
புளூடூத் வழியே நமது ஸ்மார்ட் போனில் இருக்கும் பாடலை கண்ணாடியின் கீழ் இருக்கும் ஸ்பீக்கர் மூலம் கேட்டு மகிழலாம். நமது போனிற்கு வரும் அழைப்புகளை ஏற்கலாம். சிரி ( siri ), கூகுள் துணையுடன் செய்திகள், வானிலை போன்றவற்றை நமது குரல் கட்டளைகளின் மூலமே பெறலாம். ரீசார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் பேட்டரியில் இது இயங்குகிறது.