வானவில் : எல்லாவற்றையும் இயக்கும் ஒரே ரிமோட்

நிறைய ஸ்மார்ட் கருவிகள் வீட்டில் இருக்கும் போது ஒவ்வொன்றையும் தனித்தனியாக இயக்குவது சற்று தொல்லையாக இருக்கும்.

Update: 2019-01-30 12:19 GMT
எல்லா கருவிகளையும் இயக்க ஒரே ஒரு ரிமோட் இருந்தால் என்று நினைக்க தோன்றுகிறதா? அதையும் கண்டுபிடித்து விட்டனர். சட்டேசி என்றழைக்கப்படும் இந்த ரிமோட் புளூடூத் கருவிகளை இயக்கும். உட்கார்ந்த இடத்திலேயே கணினி, டேப்லெட் மற்றும் ஸ்மார்ட் போன் போன்ற கருவிகளை இயங்க வைக்கலாம். பாட்டு கேட்கும் போதோ வீடியோ பார்க்கும் போதோ சத்தத்தின் அளவை கட்டுப்படுத்தலாம். வேண்டிய படங்களை தேர்ந்தெடுக்கவும் உதவும்.

இது மட்டுமின்றி அலுவலகம் மற்றும் கல்லூரிகளில் வகுப்பு எடுக்க பயன்படும் புரொஜெக்டர் போன்றவற்றையும் இயக்கலாம். சுமார் 33 அடி வரை இந்த ரிமோட் வேலை செய்யும். புளூடூத் 3.0 உள்ள பெரும்பாலான கருவிகளை இதனைக் கொண்டு இயக்கலாம். பார்ப்பதற்கு மிகவும் மெல்லியதாக அழகாக இருக்கிறது இந்த சட்டேசி ரிமோட்.

மேலும் செய்திகள்