வானவில் : அலுவலக மேசை மேல் வைக்கும் பேப்பர் வெயிட்

கொரியாவைச் சேர்ந்த சேசோ எனப்படும் டிசைன் ஸ்டூடியோவினர் கிராம் என்ற பெயரில் பேப்பர் வெயிட்டை கண்டுபிடித்துள்ளனர்.;

Update: 2019-01-30 11:24 GMT
மூன்று அடுக்குகளாக இருக்கும் இதை நமது தேவைக்கேற்ப எப்படி வேண்டுமானாலும் உபயோகித்து கொள்ளலாம். பேப்பர் வைத்துக் கொள்ள, பேனா, மெழுகுவர்த்தி பொருத்திக் கொள்ள என்று அலுவலக மேசைக்கு தேவைப்படும் அத்தனைக்கும் இது பயன்படும்.

இதில் இருக்கும் மூன்று அடுக்குகளையும் தனித்தனியாக பிரித்து கணக்கற்ற விதங்களில் நமது கற்பனைக்கேற்ப பயன்படுத்தலாம். பூக்கள் வைக்கும் தொட்டியாகவும் உபயோகப்படுத்தலாம். இந்த கிராம் மூன்று விதமான உலோகங்களில் கிடைக்கிறது.

மேலும் செய்திகள்