வானவில் : ‘இந்திய சாலைகளின் ராஜா’

இன்றைக்கு எத்தனையோ நவீன ரக வெளிநாட்டு கார்கள் வந்துவிட்டாலும் நம் நாட்டு ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான அம்பாசிடர் பலரது உள்ளத்தை கவர்ந்த காராகும்.

Update: 2019-01-30 10:46 GMT
பிரிட்டிஷ் காரான மோரிஸ் ஆக்ஸ்போர்ட்டின் சாயலில் உருவாக்கப்பட்ட அம்பாசிடர் 1958-ல் முதன் முதலில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது.

2014 வரை இந்த காரை தயாரித்த ஹிந்துஸ்தான் நிறுவனம் அதன் பின்னர் நவீன வகை கார்களின் வரவால் இதனை நிறுத்திக் கொண்டது. ‘இந்திய சாலைகளின் ராஜா’ என்று வர்ணிக்கப்பட்ட அம்பாசிடரை வைத்திருப்பது நிறைய பேரின் கனவாக இருந்தது. அரசியல் பிரமுகர்கள் முதல் திரைத்துறை பிரபலங்கள் வரை பலரும் இந்த காரை வைத்திருந்தனர். அகலமான சீட்டுகள், கால்களை நீட்டி சவுகரியமாக அமரும் வசதி, பின்னால் நிறைய பொருட்கள் வைத்துக் கொள்ள பெரிய இடம் என்று அந்த காலத்து சொகுசு காராகவே பார்க்கப்பட்டது அம்பாசிடர்.

மேலும் செய்திகள்