திருமணமான 2 மாதங்களில் எலி மருந்து தின்று புதுப்பெண் தற்கொலை
திருமணமான 2 மாதங்களிலேயே புதுப்பெண் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
வானூர்,
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா நெசல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷினி (வயது 26). இவருக்கும் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் தமிழ்வேலன் என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதன்பிறகு சுபாஷினி, கணவருடன் சென்னையில் தங்கினார். இந்த நிலையில் சமீபத்தில் நெசல் கிராமத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சுபாஷினி வந்தார். அதன் பின்பு அவர் மீண்டும் சென்னைக்கு செல்லவில்லை. தாய் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்தநிலையில் கடந்த 27-ந் தேதி எலி மருந்தை தின்று வீட்டில் சுபாஷினி மயங்கிக் கிடந்தார். இதைப்பார்த்ததும் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி கனகசெட்டிகுளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் சுபாஷினி நேற்று முன்தினம் பரிதாபமாகச் செத்தார்.
இதுகுறித்து கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து சுபாஷினி தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து விசாரித்தனர். திருமணமாகி 2 மாதங்களிலேயே சுபாஷினி தற்கொலை செய்து கொண்டது குறித்து விழுப்புரம் உதவி கலெக்டர் குமரவேலுவும் விசாரணை நடத்தி வருகிறார்.