வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் 2–வது நாளாக போராட்டம்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ–ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

Update: 2019-01-29 22:30 GMT

போடிபட்டி,

 ஆசிரியர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை கைவிடக்கோரியும் உடுமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர் நேற்று முன்தினம் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல கல்லூரிக்கு வந்த மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்லாமல் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆசிரியர்களுக்கு ஆதரவாக கோ‌ஷங்களையும் எழுப்பினர். சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பின்னர் கலைந்து சென்றனர். ஆசிரியர்களுக்கு ஆதரவாக இரண்டாவது நாளாக கல்லூரி மாணவ மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்