கோபி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்தது; முதியவர் பலி

கோபி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் முதியவர் பரிதாமாக இறந்தார். சிறுமி உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-01-29 22:15 GMT

கடத்தூர்,

ஈரோடு சாஸ்திரி நகர் செல்வமுத்துக்கவுண்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் இக்பால் பாஷா (வயது70). இவர் நேற்று முன்தினம் இரவு உறவினர்கள் ஜீனத் (70), ‌ஷப்னாஸ் (33) மற்றும் ‌ஷமிகா (3) ஒரு காரில் சத்தியமங்கலம் நோக்கி சென்றார். காரை அதேப்பகுதியை சேர்ந்த ஜகாங்கீர் பாஷா (34) என்பவர் ஓட்டினார்.

இந்த கார் நள்ளிரவு 12 மணி அளவில் கோபி அருகே உள்ள மாக்கினாங்கோம்பை பகுதியில் உள்ள ஒரு வளைவில் சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்து பாலத்தின் சுவரில் மோதியதோடு, பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதனால் காருக்குள் இருந்த 5 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதனை கவனித்த அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே இக்பால் பாஷா பரிதாபமாக இறந்தார். மற்ற 4 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுகுறித்து கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்