மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 41 பயனாளிகளுக்கு ரூ.3¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்

தஞ்சையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 41 பயனாளிகளுக்கு ரூ.3¼ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்.;

Update: 2019-01-28 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும். முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும். கல்வி கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 652 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரத்தை தொடர்புடைய மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள், சக்கர நாற்காலிகள், 5 பயனாளிகளுக்கு தையல் எந்திரங்கள், கட்டுமான தொழிலாளர் நல வாரியம் சார்பில் 5 மாணவிகளுக்கு கல்வி கட்டணம் என மொத்தம் 41 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 26 ஆயிரத்து 361 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அண்ணாதுரைவழங்கினார்.

கூட்டத்தில் தொழிலாளர் நல உதவி ஆணையர் விஸ்வநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அதிகாரி ரவீந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்