‘உரி’ துல்லிய தாக்குதல் தொடர்பான திரைப்படம் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பார்த்தார்

‘உரி’ துல்லிய தாக்குதல் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படத்தை, மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பார்த்தார்.

Update: 2019-01-28 21:45 GMT
பெங்களூரு,

கடந்த 2016-ம் ஆண்டு உரி என்ற இடத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 17 கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து, துல்லிய தாக்குதல் (சர்ஜிகல் ஸ்டிரைக்) நடத்தி தீவிரவாதிகளின் முகாம்களை குண்டுகளை வீசி அழித்தனர்.

இந்த நிலையில் அந்த துல்லிய தாக்குதலை தழுவி, உரி என்ற பெயரில் ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த திரைப்படத்தை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், பெங்களூரு பெல்லந்தூர் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாக திரையரங்கில் நேற்றுமுன்தினம் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுடன் அமர்ந்து பார்த்தார்.

புதிய சக்தி வந்தது

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

இறுதியாக எனக்கு நேரம் கிடைத்துள்ளது. ‘உரி’ துல்லிய தாக்குதல், படத்தை நான் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் களுடன் சேர்ந்து பார்த்தேன். என்ன ஒரு சிறப்பான படம். நடிகர்கள் சிறந்த முறையில் நடித்துள்ளனர். இதன் மூலம் எனக்கு புதிய சக்தி வந்தது போல் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்