புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கோரி ரெயில் மறியல் செய்ய முயற்சி வாலிபர் சங்கத்தினர் 11 பேர் கைது
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கோரி தஞ்சையில் ரெயில் மறியல் செய்ய முயன்ற வாலிபர் சங்கத்தினர் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்,
மத்திய அரசு ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்போம் என கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததை கண்டித்தும், தமிழகத்தில் காலியாக உள்ள 3½ லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு பணியிடங்களை அழிக்க நினைக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறிவித்தது.
அதன்படி போராட்டத்தில் ஈடுபடுவதற்காக நேற்று ஜனநாயக வாலிபர் சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் அருளரசன் தலைமையில் மாவட்ட தலைவர் ராஜா, துணை செயலாளர் கரிகாலன், நகர செயலாளர் காதர்உசேன், பூதலூர் ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலையில் வாலிபர் சங்கத்தினர் ரெயில் நிலையம் அருகே திரண்டனர்.
பின்னர் திருச்சியில் இருந்து சென்னை செல்வதற்காக தஞ்சை வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை அவர்கள் மறிப்பதற்காக ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி அவர்களை மறித்தனர். அப்போது போலீசாருக்கும், வாலிபர் சங்கத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ரெயில் மறியல் செய்ய முயன்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர்.