கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் ‘ஜன் ஆரோக்கிய திட்டக்குழு’வினர் ஆய்வு

கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பிரதமரின் ‘ஜன் ஆரோக்கியத் திட்டத்தின்’ தலைமை செயல் இயக்குனர் டாக்டர் இந்து பூஷண் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2019-01-28 23:15 GMT
சென்னை,

பிரதமரின் ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படும் விதம் குறித்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பிரதமரின் ‘ஜன் ஆரோக்கியத் திட்டத்தின்’ தலைமை செயல் இயக்குனர் டாக்டர் இந்து பூஷண் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் பச்சிளம் குழந்தைகள் பிரிவுக்கும், தீக்காய பிரிவுக்கும் சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து பேசினர்.

அதைத்தொடர்ந்து காப்பீட்டு பிரிவுக்குச் சென்ற அவர்கள், அங்கு பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு ‘ஆயுஷ்மான் பாரத்’ தொடர்பான புரிதல்கள் உள்ளனவா? என்பதை ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது மாநில நகர்ப்புற மருத்துவத் திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் வசந்தாமணி, காப்பீட்டு திட்டத்தை சேர்ந்த டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்