பெருகவாழ்ந்தான் கடைத்தெருவில் குப்பைகள் அள்ளாததால் துர்நாற்றம் நடவடிக்கை எடுக்க வர்த்தகர்கள் கோரிக்கை
பெருகவாழ்ந்தான் கடைத்தெருவில் குப்பைகள் அள்ளாததால் துர்நாற்றம் வீசுகிறது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோட்டூர்,
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே பெருகவாழ்ந்தான் கடைத்தெருவில் ஜவுளி கடை, மளிகை கடை, ஓட்டல் உள்ளிட்டவைகள் உள்ளன. இதன் அருகில் 4 குப்பைத்தொட்டிகள் ஒன்றாக வைக்கப்பட்டு உள்ளன. குப்பைத்தொட்டி வைத்தத்தில் இருந்து இதுவரை குப்பைகளை எடுக்கவில்லை. குப்பைத்தொட்டிகள் நிரம்பி சாலையில் குப்பைகள் சிதறி கிடக்கின்றன. இதில் இறந்த எலி, பூனைகளை குப்பை தொட்டியில் வீசி செல்கின்றனர். இதனால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதியில் கடை வைத்துள்ள வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறார்கள். போக்குவரத்து மிகுந்த மன்னார்குடி-முத்துப்பேட்டை-பட்டுக்கோட்டை சாலை ஓரத்தில் இந்த குப்பைத்தொட்டிகள் உள்ளதால் மாணவ-மாணவிகள் பள்ளி செல்லும்போதும், பொதுமக்கள் கடை தெருவிற்கு வரும் போதும் துர்நாற்றத்தால் மூக்கை பிடித்தபடி செல்கின்றனர். இதனால் தொற்றுநோய் பரவும் அபாய நிலையில் உள்ளது.
அகற்ற வேண்டும்
இதுபற்றி கோட்டூர் வட்டார வளர்ச்சி அதிகாரி மற்றும் சுகாதார துறைக்கு வர்த்தகர் சங்கத்தின் சார்பில் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இல்லை என தெரிவிக்கின்றனர். எனவே குப்பைத்தொட்டிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றியும், குப்பைத்தொட்டிகளை வேறு இடங்களில் வைக்க வேண்டும் என வர்த்தகர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.