திருவாரூரில் 2 ஆயிரம் பேருக்கு ரூ.12¾ கோடி திருமண நிதி உதவி அமைச்சர் காமராஜ் வழங்கினார்
திருவாரூரில் 2 ஆயிரம் பேருக்கு ரூ.12¾ கோடி மதிப்பிலான திருமண நிதி உதவியை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.;
திருவாரூர்,
திருவாரூர் மாவட்ட கலெக்டர்் அலுவலகத்தில் திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கினார். நாகை டாக்டர் கே.கோபால் எம்.பி. முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு 2 ஆயிரம் பேருக்கு திருமண நிதிஉதவியாக ரூ.8 கோடியே 7 லட்சமும், ரூ.4 கோடியே 69 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான தாலிக்கு தங்கமும் என மொத்தம் ரூ.12 கோடியே 76 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதிஉதவியை வழங்கினார். அப்போது அவர் பேசும் போது கூறியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின்கீழ் திருமண நிதி உதவியுடன் 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டு வந்ததை, 8 கிராமாக உயர்த்தியவர். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டம் தான் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்.
அனைத்து திட்டங்களும் தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருகிறார். முதல்-அமைச்சர் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி ரூ.3 லட்சத்து 432 கோடி முதலீடுகளை பெற்றுள்ளார்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) ரவிச்சந்திரன், மாவட்ட சமூக நல அலுவலர் ஸ்டெல்லாடார்லிங், உதவி கலெக்டர்கள் முருகதாஸ் (திருவாரூர்), பத்மாவதி (மன்னார்குடி), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) இருதயராஜ், கூட்டுறவு சங்க தலைவர்கள் மூர்த்தி, மணிகண்டன், கலியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.