புதுவையில் இருந்து சென்னை சென்ற அரசு பஸ்சில் மதுபாட்டில்கள் கடத்தல் டிரைவர்-கண்டக்டர் கைது
புதுவையில் இருந்து சென்னை சென்ற அரசு பஸ்சில் மதுபாட்டில்கள் கடத்திய டிரைவர்-கண்டக்டர் கைது செய்யப்பட்டனர்.
மரக்காணம்,
புதுவையில் இருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு மதுபாட்டில்கள் கடத்தப்படுகிறது. இதனை தடுக்க கண்டமங்கலம், கோட்டக்குப்பம், பெரியமுதலியார்சாவடி, கிளியனூர், பட்டானூர், அனுமந்தை, ரெட்டிச்சாவடி பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
நேற்று கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கர் ஆகியோர் தலைமையிலான போலீசார் கோட்டக்குப்பம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து சென்னைக்கு சென்ற ஒரு அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த பஸ்சில் அட்டைப் பெட்டிகளில் 158 முழு பிராந்தி பாட்டில்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
உடனே பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் வெங்கடேசன்(வயது40) மற்றும் கண்டக்டர் பாலாஜி(39) ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்களை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.