தானேயில் மளிகை கடைக்காரரின் தந்தை அடித்து கொலை 5 கொள்ளையர்கள் கைது

தானேயில் மளிகை கடைக்காரரின் தந்தையை அடித்து கொலை செய்த கொள்ளையர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-01-27 23:00 GMT
தானே, 

தானேயில் மளிகை கடைக்காரரின் தந்தையை அடித்து கொலை செய்த கொள்ளையர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொள்ளை

தானே, கோகுல் நகர் பகுதியில் வசித்து வருபவர் சோனு. இவர் அந்த பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று சோனுவின் கடைக்குள் கொள்ளையர்கள் புகுந்தனர். அவர்கள் கடையில் இருந்த ரூ.40 ஆயிரத்தை எடுத்துவிட்டு தப்பிச்செல்ல முயன்றனர்.

அப்போது சோனுவும், அவரது தந்தை பிரதீப்பும்(வயது58) கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர்.

5 பேர் கைது

இதில், ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் தந்தை, மகன் 2 பேரையும் சரமாரியாக தாக்கினர். இதில், படுகாயமடைந்த பிரதீப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ரபோடி போலீசார் கொள்ளையர்கள் அமின் மெகபூப், அவரது தம்பி சவுகத் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்