மும்பையில் தமிழ் அமைப்புகள் சார்பில் குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம்
மும்பையில் தமிழ் அமைப்புகள் சார்பில் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.;
மும்பை,
மும்பையில் தமிழ் அமைப்புகள் சார்பில் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
குடியரசு தினவிழா
நாடு முழுவதும் நேற்றுமுன்தினம் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மும்பையிலும் குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் களை கட்டின. தமிழ் அமைப்புகள் சார்பில் குடியரசு தினவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சயான் கோலிவாடா தொகுதியில் பல்வேறு இடங்களில் நடந்த குடியரசு தினவிழாவில் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தேசியகொடி ஏற்றினார்.
மேலும் அவர் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் விதமாக மோட்டார் சைக்கிள் பேரணியை நடத்தினார். இதில் பா.ஜனதாவினர் திரளாக கலந்துகொண்டனர்.
காமராஜர் பள்ளி
தாராவியில் உள்ள தெட்சணமாற நாடார் சங்க மும்பை கிளை நிர்வகித்து வரும் காமராஜர் நினைவு ஆங்கில உயர்நிலைப்பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரி டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் கல்வி வளாகத்தில் குடியரசு தினவிழா பள்ளி சேர்மன் ராமராஜா நாடார் தலைமையில் நடந்தது. பள்ளி மற்றும் கல்லூரி முதல்வர் மைக்கிள் ராஜ் வரவேற்று பேசினார். இதில், சிறப்பு விருந்தினராக தெட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாஸ் நாடார் கலந்துகொண்டு தேசியகொடி ஏற்றினார்.
செயலாளர் சண்முகவேல் நாடார், பொருளாளர் செல்வராஜ் நாடார், துணைத் தலைவர் முருகேச பாண்டியன் நாடார், துணைச் செயலாளர் ரெத்தினராஜ் நாடார், இயக்குனர்கள் ராமர் நாடார், தங்கவேல் நாடார், காமராஜ் நாடார், மும்பை கிளை செயலாளர் காசிலிங்கம் நாடார், உதவி சேர்மன் ரெம்ஜிஸ் நாடார், நிர்வாக உறுப்பினர்கள் கோயில்ராஜ் நாடார், ஜெபக்குமார் ஜேக்கப் நாடார், பொன்ராஜ் நாடார், லிங்கத்துரை நாடார், பள்ளிக்குழு உறுப்பினர்கள் சிவனுபாண்டியன் நாடார், ரவி நாடார், ஜெகப்பிரதாபன் நாடார், தமிழ் மணி நாடார், அற்புதராஜ் நாடார், செல்வராஜ் நாடார், அருள் இசக்கிராஜ் நாடார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் மாணவர்களின் யோகா, லேசிம், டம்பல்ஸ், பிரமிடு போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.
பி.எஸ்.ஐ.ஏ.எஸ். பள்ளி
தாராவியில் உள்ள பம்பாய் தென்னிந்திய ஆதிதிராவிட மகாஜன சங்கம் நிர்வகித்து வரும் பி.எஸ்.ஐ.ஏ.எஸ். பள்ளியில் குடியரசு தினவிழா நடந்தது. இதில், தாராவி போலீஸ் சீனியர் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாட்டீல் தேசியகொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். விழாவில் சங்க பொதுச்செயலாளர் மாறன் நாயகம் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தாராவி கன்னடி சாலில் நடந்த குடியரசு தினவிழாவில் வர்ஷா கெய்க்வாட் எம்.எல்.ஏ. தேசியகொடி ஏற்றினார். இதில் அருணாசலம், சாலமன் ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர். மாணவர்களுக்கு இலவச நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.
வர்ஷா கெய்க்வாட் எம்.எல்.ஏ.
தாராவி கமலா நகரில் குடியரசு தினத்தையொட்டி மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிவசேனா கவுன்சிலர் மாரியம்மாள் முத்துராமலிங்கம் கலந்துகொண்டு மரக்கன்று நட்டார். நிகழ்ச்சியில் சிவசேனா கிளை தலைவர் முத்துபட்டன், இசக்கி பாண்டியன், ரத்னா, பாண்டி, மாரி, ஆனந்த், மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தாராவி உணவு பொருள் உற்பத்தியாளர் நலச்சங்கம் சார்பாக குடியரசு தினம் சங்க பணிமனையில் கொண்டாடப்பட்டது. சங்க மூத்த உறுப்பினர் இருதய ராஜ் கொடி ஏற்றி வைத்து பேசினார். சங்க தலைவர் செந்தூர்பாண்டியன் மற்றும் செயலாளர் ராஜாமணி, பொருளாளர் ராமகிருஷ்ணன் மற்றும் பாஸ்கர், செல்வம், முத்து கிருஷ்ணன், மகாராஜன் மற்றும் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
செம்பூரில் மும்பை பா.ஜனதா தமிழ் பிரிவு மாவட்ட தலைவர் முத்துக்குமார் ஏற்பாட்டில் நடந்த குடியரசு தினவிழாவில் பா.ஜனதா தமிழ் பிரிவு மும்பை தலைவர் ராஜா உடையார் தேசிய கொடி ஏற்றி பாரத மாதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் ராஜேஸ் புல்வாரியா, மகாராஜன், பாலகிருஷ்ணன், செல்வம், பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காட்கோபர் காமராஜ் நகர் நாடார் பொது நல சங்க அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சங்க செயலாளர் தமிழழகன் துணைத் தலைவர் துரைராஜ் நாடார், ஆலோசகர் அலெக்ஸ் நவமனி, முத்துராமன், போத்திகாளை, ராஜ்குமார், பொன்னிவளவன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல மும்பையின் பல்வேறு இடங்களில் தமிழ் அமைப்புகள் சார்பில் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.